Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு கைக்கூலியா பாத்திமாபாபு?


    பவளப்பாறைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வழக்கறிஞர் விமல் ராஜேஷ்ராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர் கூறும்போது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு உருவாக்கிய வீராங்கனை அமைப்புக்கு அரசாங்கம் அல்லாத நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. அப்பணத்தினை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

    வீராங்கனை அமைப்பு என்பது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டது. என்று அவர் கூறியிருந்தார் அப்படி எனில் அந்த அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தை கொண்டு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அவர் என்னென்ன செய்து இருக்கிறார் என தெரியவில்லை. அவர் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவானவன் என்பது அர்த்தமல்ல. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதே எனது கருத்து ஆனால் ஸ்டெர்லைட் ஆலை போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் அமிலத்தை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து அவைகளையும் மூட வேண்டும், அதற்கு பாத்திமாபாபு ஏன் இதுநாள் வரையில் குரல் கொடுக்கவில்லை?  ஸ்டெர்லைட் ஆலையை மட்டுமே மையப்படுத்தி போராட்டங்களும் இதர விஷயங்களும் செய்து வருவதால் அவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை வைத்து பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என தோன்றுகிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கேட்பதற்கும்,  விசாரணைக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அழைத்தபோது அதில் நான் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தேன். அப்போது ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என கூறியதுடன் தூத்துக்குடியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் நான் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி எனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு பல கட்ட போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது பெரும் போராட்டங்களுக்குப் பிறகு தான் நான் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தேன். ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தங்களிடம் ஏராளமான ஆவணங்கள் உள்ளது என கூறி வரும் பாத்திமாபாபு இதுநாள் வரையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜரானபோது ஏன் அந்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை?

    மக்கள் நலனும் சுற்றுப்புற பாதுகாப்பும் மட்டுமே குறிக்கோள் என்றால் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட மாசு குறித்து போராட்டங்கள் நடத்திய பாத்திமாபாபு அதுபோன்று நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் நச்சுவாயு மற்றும் கரும்புகையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் 4 முறை நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்கள் அதுகுறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நச்சு வாயுக்களை வெளியேற்றும் ஆலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் உண்மையான போராளிகளுக்கு ஆவணங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கலும் சிரமமும் உள்ள நிலையில் பேராசிரியை பாத்திமாபாபுவால் மட்டும் எப்படி பெரிய பெரிய ஆட்களை உடனே சந்திக்க முடிகிறது, ஆவணங்களை திரட்ட முடிகிறது. இதுபோன்று வெளியூர் விமான பயணம், முதல்வகுப்பு ரயில் பயணம் உள்ளிட்டவை எல்லாம் அனுபவித்து வருகின்றனர்.

    இதையெல்லாம் பார்க்கையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படக்கூடாது என நினைக்கும் அரசாங்கம் அல்லாத நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கைக்கூலியாக பேராசிரியை பாத்திமா பாபு செயல்படுகிறாரா …
    செய்தியாளர் : தங்கம் பாலு 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad