Header Ads

  • சற்று முன்

    சசிகலாவாக மட்டும் நான் நடிக்கவே மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டம்


    முக்கியம் நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். வெயிட் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி.

    மகிழ்ச்சி
    வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அதனால் தான் ஒரு நடிகையாக என்னால் வளர்ச்சி பெற முடிகிறது. வட சென்னை படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆகும். கிரிக்கெட் நான் கனா போன்று ஒரு படத்தில் இதுவரை நடித்தது இல்லை. இது போன்ற கதாபாத்திரம் எதிர்காலத்தில் அதிக அளவில் வரும் என்றும் நினைக்கவில்லை. கனா போன்ற படங்கள் அடிக்கடி வராது. கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது சவாலாக இருந்தது. அதற்காக நான் தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டேன். அந்த கதாபாத்திரம் நன்றாக வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.
     சசிகலா

    தற்போது 20 சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையமப்படுத்தி எடுக்கப்படுகிறது. இது 50 சதவீதமாக உயர வேண்டும். சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் மீ டூ இயக்கம் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தாலும் கூட நான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றார் ஐஸ்வர்யா.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad