Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வைகோ போட்டிட வேண்டும் என மதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்



    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா  மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். 

    மாவட்ட துணை செயலாளர்கள் பவுன் மாரியப்பன், தாயகம் செல்வராஜ், வக்கீல் குருசாமி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் செண்பகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் கலந்து கொண்டு சென்னையில் நடந்த  மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முடிவு குறித்து  பேசினார். 


    தொடர்ந்து மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவர் சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர்களாக தாயகம் செல்வராஜ், வக்கீல் குருசாமி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளராக செண்பகப்பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக பரமசிவம் ஆகியோர்,  நியமனம் செய்த மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவிப்பது, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் வர இருக்கின்ற தேர்தல்களில் பணியாற்றும் மிகவும் சிறப்பாக பணியாற்றும் வகையில் இம்மாதம் 25ம் தேதிக்குள் வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் , மதிமுக பொது செயலாளர் வைகோவிடம் பாராட்டு பெறும் வகையில் வடக்கு மாவட்ட சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தேர்தல் நிதி வசூல் செய்து, மற்ற மாவட்டங்களைவிட முதல் மாவட்டமாக இடம்பெறுவதற்கு அயராது பாடுபட்டு வெற்றி கண்பது, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகள் ஆரம்பித்திருக்கும் இந்த கால கட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் கடன் தொகைகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர், எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    இல்லையென்றால் மதிமுக சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழக அரசால் அதிக அளவில் இரு மடங்கு தொகையாக உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.


    செய்தியாளர் - கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad