• சற்று முன்

    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குனர்



    ஹோட்டசென்னை: அப்பா வயது தெலுங்கு நடிகரும், தமிழ் இயக்குனர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ப்ரெர்னா கன்னா தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு படங்களில் நடித்து வந்த ப்ரெர்னா கன்னா வேறென்ன வேண்டும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் அவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,லில் பிரபல நடிகர் அத்துமீறினார், இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பகீர்
    நடிகர் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் நன்றாக ஓடியதால் எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தது. சினிமா பின்னணி இல்லாததால் எனக்கு வழிகாட்ட காட்ஃபாதர் யாரும் இல்லை. ஹைதராபாத்தில் இருந்து ஒரு சீனியர் நடிகர் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார்.
    அம்மா சிவப்பு சேலை அணிந்து, ஈர முடியுடன் முக்கியமாக அம்மா இல்லாமல் தனியாக ஸ்டார் ஹோட்டலுக்கு வருமாறு அந்த நடிகர் கூறினார். அவர் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் என் அம்மாவுடன் ஹோட்டலுக்கு சென்றேன். உணவகத்தில் வைத்து பேசலாம் என்று கூறியும் கேட்காமல் தனது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றால் கண்ணில் உள்ள மையை அழிக்குமாறு கூறினார். 

    இயக்குனர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது கோலிவுட்டிலும் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஒருவர் என் புகைப்படங்களை பார்த்துவிட்டு என்னையும், என் மேனேஜரையும் அவரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அங்கு சென்றபோது அவர் என் உடம்பையே பார்த்துக் கொண்டிருந்தார். அட்ஜஸ்ட் செய்தால் தான் ஹீரோயின் ஆக முடியும் என்று அந்த இயக்குனர் என் மேனேஜரிடம் தெரிவித்தார். மேலும் படுக்கைக்கு வருமாறு என்னிடமே கூறினார். அவர் பேச்சை கேட்டு கோபம் அடைந்த நான் அவரின் அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டேன் என்றார் ப்ரெர்னா.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad