ஓசூரில் போதை பொருட்கள் விற்பனை செய்த நான்கு பேர் கைது*
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் பாலாஜி நகரில் வீட்டில் பதிக்க வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலிஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலிஸார் ராதாகிருஷ்ணன் என்பவர் கஞ்சாவை சிறு பொட்டலமாக தயாரித்து ஆட்கள் உதவியுடன் ஓசூரில் பல பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இதில் தொடர்புடைய இக்பால் உஷேன் , பாலா , மனோஜ்குமார் மற்றும் காளிராஜ் ஆகிய 4 பேரையும் ஓசூர் நகர போலிஸார் கைது செய்தனர் ,
அவர்கள் வைத்திருந்த கஞ்சா 1 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்,வீட்டில் பதிக்க வைத்திருந்த ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார், தலைமறைவான ராதாகிருஷ்ணனை ஓசூர் நகர காவல் துறை தேடி வருகின்றனர்
செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர்
கருத்துகள் இல்லை