ராணிப்பேட்டை அருகே பைனான்சியர் வீட்டில் 42 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 2லட்சம் கொள்ளை.
வேலூர்வட்டம் இராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள சங்கம் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (42) இவர் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு, வாலாஜாபேட்டை போன்ற பகுதிகளில் தினம், வார, மாதம் என பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வெளி ஊர் சென்று இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 41/2 சவரன் நகை மற்றும் 2,40,000 ரொக்கம் மற்றும் 1/4 கிலோ வெள்ளி போன்றவை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை வீட்டிற்கு வந்த செல்வராஜ் வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மரம் நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைனான்சியர் வீட்டில் 42சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : அக்னி புயல் - வேலூர்
கருத்துகள் இல்லை