புறம்போக்கு நிலத்தில் மண் எடுக்கும் போது சரிந்து விழுந்து முதியவர் பலி
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கானம்பாளையம் சுடுகாடு பாம்பாற்று புறம்போக்கு நிலத்தில் மணல் எடுக்கும் போது அதே பகுதியில் வசித்துவந்த கூத்தன் என்கின்ற ராஜேந்திரன் வயது 55 மணல் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை