Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் முகாமிட்டு 40க்கு மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர்.



    ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 40 காட்டுயானைகள் : 20  க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்து தேன்கனிகோட்டை வனப்பக்குதிக்கு விரட்டினர்*

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே போடூர் வனப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக  முகாமிட்டிருந்த 40 காட்டுயானைகளை 20 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு சுமார் 10 மணிநேரம் போராடி விரட்டினர்.

    ஓசூர் அருகேயுள்ள போடூர் வனப்பகுதியில் 40 காட்டுயானைகள் தஞ்சமடைந்து சுற்றிவந்தது. இந்த காட்டுயானைகள் போடூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர், ராமபுரம், ஆளியாளம், பன்னப்பள்ளி, குக்களப்பள்ளி, பிள்ளைகொத்தூர், காமன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றிலும் சுமார் பல்லாயிரம் ஏக்கரில் நெல்,ராகி போன்ற பயிர்களை  பயிரிட்டு அந்த பயிர்கள் சுமார் 20 நாட்க்கள் அறுவடை காலம் என்பதால் அதற்க்குள் காட்டு யானைகள் சேதப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    இந்த காட்டுயானைகளை கர்நாடகா வனப்பக்குதிக்கு  விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நேற்று  20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியை துவக்கினர். போடூர் வனப்பகுதியிலிருந்த 40 காட்டுயானைகளை ஒன்று சேர்த்து பட்டாசு வெடித்து சானமாவு, சிரிகிரிப்பள்ளி, பென்னிகள், அனுசோனை வனப்பக்குதி வழியாக சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து யானைகளை பட்டாசுகள் வெடித்து தேன்கனிகோட்டை அருகே உள்ள மாரசந்திரம் வனப்பக்குதிக்கு விரட்டினர்.

    மேலும் இந்த யானைகளை ஜவளகிரி வழியாக கர்நாடகா வனப்பக்குதிக்கு இன்று அல்லாது நாளை விரட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தார்.

    செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad