விசாயிகளுக்கு தனி நபர் காப்பீடு செய்ய வேண்டும் விவசாய சங்கங்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை சின்னகீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும். இந்த பொதுக்கூட்டத்திற்கு வழக்கறிஞராக ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விவசாயி அய்யாகண்ணு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யும் காலத்தில் விவசாயிகளுக்கும் தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் கட்சியினருக்கே வாக்களிப்போம் என்று நிச்சயமாக பணத்திற்காக வாக்களிக்க மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். உடனடியாக அணைத்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிசம்பர் 24-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை வழங்க இருப்பதாக ராமநாதாரம் மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் தவறும் பட்சத்தில் மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என கூறினார் இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்
செய்தியாளர் : திருவாடானை -ஆனந்த் குமார்
கருத்துகள் இல்லை