ஆற்காடு அருகே கள்ளகாதலுடன் சேர்த்து கணவனை கொலை செய்த மனைவி ..
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புராஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்புமீட்கப்பட்டது. போலீசார் பிணத்தைகைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி என்பது தெரிய வந்தது. எனது கணவர் காணவில்லை என அவரது மனைவி மாரி ஏற்கனவே ஆற்காடு போலீசில் புகார் கொத்திருந்தார். இதையடுத்து போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அப்போது பிணமாக இருப்பவர் எனது கணவர் இல்லை என கூறினார். பின்னர் போலிசார் அடையாளம் தெரியாத பிணமாக கருதி வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ரவியின் மனைவி மாரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாள் அடைவில் கள்ளகாதலாக மாறி அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படிகடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிகுடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலைசெய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.தற்போது அவர்கள் இருவரும் அனாதையாக உள்ளனர். தற்போது வேலூர் மாவட்டத்தில் கள்ள காதல் விவகாரத்தில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : அக்னி புயல் - வேலூர்
கருத்துகள் இல்லை