Header Ads

  • சற்று முன்

    பாய்ச்சல் கிராமத்தில் பாயும் கழிவு நீரால் 4 பேருக்கு டெங்கு



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் சரிவர கட்டப்படாத கால்வாயில்  கழிவுநீர் வீடு மற்றும் தெருக்களில் வழிந்தோடுவதால்  கிராமத்து மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி பல நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


    அப்போது சமூக ஆர்வலர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறிய போது  
    இந்தப் பாய்ச்சல் கிராமம் ஆத்துகிளைமேட்டில்    சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இங்கு வேலைக்கு மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் சுமார் இரண்டுக்கும் மேற்பட்ட இந்த வழியாகத்தான் கடந்து செல்கின்றனர் இந்த கால்வாய் இரண்டு வருடங்களாகியும் துப்புரவு செய்யப்படாமல் முறையான வழித்தடத்தில் பாதியிலேயே நிறைவடைந்த கால்வாயின் மூலம் அதற்கு மேல் கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலிருந்து தெருக்களின் மூலமாக வீட்டிற்குள் நுழையும் பொருட்டு இந்தக் கழிவு நீர் செல்கிறது. இப்பிரச்சனையை என் கிராம மக்கள் தினம்தோறும் அனுபவித்து வருகின்றனர் இதை சீர்செய்ய பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக என்னுடைய குடும்பத்தில் 4 பேர் டெங்கு காய்ச்சலினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர் எனக் கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad