Header Ads

  • சற்று முன்

    பேரூராட்சி அலட்சியம் சாலை விபத்துகளுக்கு காரணம் ....


    திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியத்தின் அலட்சியத்தால் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் பெரும் பள்ளம். சரிசெய்ய கோரிக்கை


    திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சிக்கு மாவூரில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் தொண்டி செல்கிறது. இந்த குடிநீர் செல்ல மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அமைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பாகுடி விலக்கு ரோட்டின் நடுவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் சென்று வந்ததால் சிறிய பள்ளம் தற்போது பேராபத்தை ஏற்படுத்தும் பெரிய பள்ளமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியில் இந்த பள்ளம் தெரியாத நிலையில் அருகில் வந்த பொழுதுதான் பள்ளம் இருப்பது தெரியவந்து திடீரென பிரேக் போடப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் உடைப்பு ஏற்பட்ட உடனேயே தொண்டி பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இரண்டு சக்கர வானகனத்தில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விபத்திற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் நாங்கள் பள்ளம் அடையாளம் தெரிய சிமென்ட் உரை ஒன்றை வைத்திருந்தோம் அதையும் லாரி இடித்துவிட்டு சென்றுவிட்டது. எனவே சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad