• சற்று முன்

    திருவாடானையில் பொது பணித் துறை மெத்தனப்போக்கு அதிகாரிகள் அலட்சியம்


    திருவாடானை அருகே கிராத்து சாலையில் தூம்பு அமைக்க தோண்“டியதை அப்படியேகிடப்பில்  போட்டுவிட்டதால் பேரூந்து 6 மாதமாக செல்லவில்லை இதனால் பொது மக்கள்“ அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குளத்தூர் கிராமத்தில் இருந்து அரும்பூர் செல்லும் தார் சாலையில் கண்மாய் மடையில் இருந்து தண்ணீர் செல்ல ஏதுவாக தார் சாலையில் இரண்டு இடங்களில் தூம்பு அமைப்பதற்காக சாலையை  துண்டித்து தூம்பை போட்டுவிட்டு மணலைப் பாட்டு அப்படியே மூடி விட்டு ஒப்பந்தகாரர் சென்றுவிட்டதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அரசு பேரூந்தும் நிறுத்தப்பட்டது. கடந்த ஆறுமாத காலமாகியும்  இதுவரை சரிசெய்யவில்லை இதனால் கடந்த ஆறு மாதமாக அரசு பேரூந்து நிறுத்தப்பட்டாததால் மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் நீண்ட தூரம் நடந்துவந்து பள்ளிகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்ல வேண்டிய அவலநிலைய உள்ளது. மழை பெய்தால் இவ்வழியே நடந்து செல்லக் கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார்கள். இதுகுறித்து திருவாடானை பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது இரண்டு நாட்களில் சரிசெய்துவிடுவதாக தெரிவித்தார்கள். இந்த சாலையை சீரமைக்க பொதுமக்களும் மாணவ மாணவிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் .


    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்த் குமார்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad