• சற்று முன்

    அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ



    பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து  செய்யப்படும் என்றும், நடிகர் கமலஹாசன் முதலில் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அறிவுரை என்றும், பருவகால மாற்றத்தினால் நோய்கள் வருவது வழக்கம், இதற்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் எதிரே உள்ள கோவில்பட்டி பொது கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன் தொகை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்து கொண்டு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கினார். 

    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது, நிறுத்துவது கூறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என்றும், நடிகர் கமலஹாசன் அரசியல் அரிசுவடி அறியமால் காலடி எடுத்து வைக்கிறார். அவசரப்பட வேண்டும், அவருக்கு சிறந்தது கிடையாது, நடிகர் கமலஹாசன் முதலில் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அறிவுரை என்றார். மேலும் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சியில் பழக்கப்பட்டவர், முதலில் கால் அடி எடுத்து வைத்ததுமே திமுகவினர் நாங்கள் எமர்ஜென்சியை பார்த்தவர்கள் என்று கூறுவர்கள், இந்திராகாந்தி பிரதமாரக இருந்த போது நெருக்கடி நிலையில் அறிவித்த போது ஏற்கனவே அரசில் இருந்த போது திமுகவினர் ஊழல் செய்த காரணத்தினால் தான் கைது செய்யபட்டனர்.

    தமிழகத்தில் எந்த எமர்ஜென்சியும் இல்லை, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எந்த தொற்று நோய்களும் தமிழகத்தில் பரவலாக காணப்படவில்லை, பருவகால மாற்றத்தின் காரணமாக நோய்கள் வருகிறது., அதற்கு ஏற்ப வருமுன் காப்போம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது. இது போன்ற  நேரங்களில்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது.எப்போதுமே மக்களை அச்சறுத்தி, பீதி ஏற்படுத்தி அரசியல் நடத்துவது திமுகவின் வாடிக்கை என்றார்.மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் மாற்று அணிக்க சென்ற காரணத்தினால் இன்றைக்கு தேவையில்லாத இடைத்தேர்தல் வந்துள்ளது, இனி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை ஒதுக்கிட்டு உண்மையான விசுவாசிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெறுவோம்18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் விளக்கம் கேட்ட போது அல்லது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது , பேச வந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது தற்போது அரசியலுக்காக பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், தமிழக அரசு திரையரங்குளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து முறைப்படுத்தியுள்ளது.பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும், இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் யார் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் அறிவித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad