Header Ads

  • சற்று முன்

    மழை எதிரொலி – புகழ்பெற்ற எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் - 5கோடி ரூபாய் வரை இழப்பு



    கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் மழை எதிரொலியாக தீபாவளி வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது.வழக்கமாக 6 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் ஆடுகள் வியாபாரம் இந்த ஆண்டு வெறும் 1 கோடிக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளதால் 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையினால் ஆடுகளை வாங்க ஆள் இல்லமால் வியாபாரிகள் திரும்பி கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொது மக்களும் இங்கு வருவது வழக்கம், ஒவ்வொரு வரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 3 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது. விலைக்கு ஏற்ற ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இப்பகுதியில் பெரும்பாலும், விவசாயிகளை ஆடுகளை வளர்ப்பதால், இயற்கை உணவு ஆடுகளுக்கு கிடைத்து விடும் என்பதால் ஆட்டு கறி ரூசியாக இருக்கும் என்பதால் அதிகளவில் மக்கள் எட்டயபுரம் சந்தையை நோக்கி பல ஆண்டுகளமாக ஆடுகள் வாங்க வருகின்றனர். அதிலும் தீபாவளி, பொங்கல், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் 6 கோடியில் இருந்து 10 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட காலங்கள் உண்டு. அதிலும் தீபாவளி வியாபாரம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் இந்தாண்டு தீபாவளிவியாபாரம் அதற்கு நேர்மாறக அமைந்துள்ளது. காரணம் மழை தான். வரும் செவ்வாய்க்கிழமை என்பதால் சனிக்கிழமை நடைபெறும் எட்டயபுரம் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், காலையிலே மழை பெய்ய தொடங்கியதால் தீபாவளி வியாபாரம் களையிழந்து போனது. அதிகாலையில் இருந்து ஆடுகள் வரத்து கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது. 


    காலையில் வியாபாரம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியதால் விற்பனையில் சுனக்கம் ஏற்பட்டது. விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் ஆடுகளை வாங்க ஆள் இல்லை, அப்படியே வந்தாலும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்கும் நிலை உள்ளதாக ஆட்டு வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 15 ஆயிர ரூபாய்வரை சென்ற ஆடு,இந்த ஆண்டு வெறும் 5 ஆயிர ரூபாய்க்கு கேட்கும் நிலை உருவாகியுள்ளது. வழக்கமாக 6 கோடி ரூபாய் வரை நடைபெறும் விற்பனை இந்தாண்டு மழையினால் வெறும் 1கோடி ரூபாய் நிறைவு பெற்றுள்ளது. அதிக விலைக்கு விற்பனையாகும் என்று நினைத்து ஆடுகளை கொண்டு வந்த வியாபாரிகள் அவற்றினை வேதனையுடன் திருப்பிக்கொண்டு சென்றனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad