Header Ads

  • சற்று முன்

    அமைச்சர் தொகுதியில் கள்ள சாராயம் படு ஜோர் ... கண்டுகொள்ளாத காவல் துறை


    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். காரணம் இந்துக்களின் எழுச்சி நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விவேகானந்தர் தனது சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த நாட்டம்பள்ளிக்கு வந்துள்ளார். அவரின் நினைவாக இங்கு ஒரு மடம் உள்ளது. அதேபோல் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணியின் சொந்த தொகுதி இந்த நாட்டறம்பள்ளி  இந்த தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தற்போது வரை தமிழக அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ரஹாரம் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  என்ற முறையில் அமைச்சர் வீரமணி  சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். இப்படி பல வசதிகள் உள்ள இந்த அக்ரஹாரம் மலையில் சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்கு கள்ளத்தனமாக கள்ள சாராயம் உரல்  போட்டு அமோகமாக சாராயம் காட்சி விற்பனை செய்து வருகின்றனர்.  இங்கு காட்சும் சாராயம் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா,  கர்நாடகா போன்ற  பகுதிகளுக்கு தங்கு தடையின்றி சாராயம் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமலும் தனக்கு வரவேண்டிய மாமூல் வசூல் செய்வதில் குறிக்கோளாக இருக்கிறது. தமிழக அரசு சார்பில் விற்கப்படும் டாஸ்மாக் கடையின் வருமானம் குறைந்து கொண்டே வருவது என்பது அரசின் கவலை இப்படி கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் தமிழக  அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதோடு கள்ளச்சாராயம் குடிப்பதால் பல்வேறு  பாதிப்பு ஏற்படும்.  எனவே  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது உடனடியாக  குண்டர் சட்டத்தில் கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.‌


    செய்தியாளர் : அக்கினி புயல் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad