Header Ads

  • சற்று முன்

    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.


    கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது.


    இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலர், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர். உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு 
    கடந்த 2007 ஆம் ஆண்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது .

    கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் இருந்த கைதிகளை நல்லெண்ணத்தின் அடிப்படையில்  விடுதலை செய்ய பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டின் விழைவை முன்னிட்டு  இன்று  அவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர்.  வேலூர் மத்திய சிறையிலிருந்து சுமார் 12 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : அக்கினி புயல் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad