பிச்சை எடுத்து நூதன போராட்டம் : மாவட்ட ஆட்சியரை கண்டித்து
விருதுநகரில் ஆதிதிராவிட நலத்துறையினால் செயல்படுத்தப்படும் விடுதிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும்19 சமையலர்கள் மற்றும் 29 துப்புரவு பணியாளர்கள் உட்பட மொத்தம் 48 ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் வாய்மொழியாக உத்தரவிட்டு பணி நீக்கம் செய்துள்ளார்.
இதனை கண்டித்தும் தங்களுக்கு உடனே பணி வழங்க கோரியும் தாங்களின் பணி நீக்கம் செய்யதற்க்கான உத்தரவு ஆணையை உடனே வாபஸ் வாங்க வேண்டும் எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஊழியர்களும் தங்கள் குழந்ததைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 16 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சியர் இவர்களது கோரிக்கையை கண்டு கொள்ளாத காரணத்தால் 17 வது நாளான இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : தங்கம் பாலா








கருத்துகள் இல்லை