கொடுங்கையூரில் அத்துமீறி மணல் கொள்ளை
கொடுங்கையூர் வேதாந்த முருகப்பா நாயக்கர் சாலையில் வேதாந்த முருகப்பா நாயக்கருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இடத்தில் வாரிசு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பெண் வாரிசின் உரிமையாளர்களான உமாபதி, தனசேகர், சுகுணா, திருவேங்கடம் ஆகியோருக்கு தெரிவிக்காமல் ஆண் வாரிசு உரிமையாளர்களான வேதா,ராஜன், சுந்தர் இவர்கள் வழக்கில் உள்ள இடத்தில் அத்துமீறி கட்டடம் கட்டுவதோடு 15 ஏக்கர் நிலப்பரப்பில் மணல் திருட்டுத்தனமாக எடுத்து மணல் விற்பனை செய்து வந்தனர்.
இந்த சமூக விரோத செயலை கண்டித்து பெண் வாரிசின் உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் புகார் அளித்து மணற் கொள்ளையை தடுக்க வட்டாச்சியர் துணையுடன் கடந்த 25ஆம் தேதி சீல் வைத்தனர்.

செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை