Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது


    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    பின்னர் அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப்பெருமான் ஆலயத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உத்தமர்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாள்விழா மற்றும் சொக்கப்பானை ஏற்றுதல் நடைபெற்றது. காரைக்காலில் உள்ள ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு  ஸ்ரீசுயம்வரதபஸ்வினி தாயாருக்கு நடைபெற்ற சகஸ்ர தீப வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


    செய்தியாளர்  : பொன் முகரியன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad