Header Ads

  • சற்று முன்

    இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவும், அவருடைய ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா தாக்கப்பட்டார். 
    இதனை தொடர்ந்து, நேற்று பலத்த பாதுகாப்புடன் கரு ஜெயசூர்யா பாராளுமன்றம்  நுழைந்தார். ஆனால், 2வது நாளாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர், ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad