• சற்று முன்

    கோவில்பட்டியில் துணிகரம் - வீட்டு பூட்டை உடைத்து மது அருந்தி விட்டு, 50 பவுன் நகை கொள்ளையடிச் சென்ற மர்ம ஆசாமிகள்



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு பார்க் சாலையில் உள்ள லோடு ஆட்டோ டிரைவர் சத்யநாராயணன் என்பவர் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ 30,000 பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்து மதுபாட்டிலை எடுத்து மது அருந்திய பின்பு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு பார்க் ரோட்டை சேர்ந்தவர் சத்யநாராயணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது கோவில்பட்டியில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலைப் பகுதியில் வசிக்கும் சித்தி மங்கை தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்க்க சத்யநாராயணன் நேற்று குடும்பத்துடன் சென்றிருந்தார்.இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.  தெரிய வந்தது. இது குறித்து சத்யநாராயணன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் டி.எஸ்.பி. ஜெபராஜ், காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 


    இதற்கிடையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம ஆசாமிகள், வீட்டில் வைத்திருந்து ஒரு புல் மது பாட்டிலில் பாதியை அருந்தி விட்டு பின்பு தனது கொள்ளை சம்பவத்தினை அரங்கேற்றி சுவாரசியமான நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில்பட்டியில் இரு பார்க் சாலையும் எப்போது அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் சாலை, அப்பகுதியில் மெயின் சாலையில் உள்ள வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad