• சற்று முன்

    இறந்தவர் பெயரில் லோன் வாங்கியதாக வங்கி நோட்டீஸ் அதிர்ச்சியில் உரைந்த உறவினர்கள்.


    திருவாடானை பாரத ஸ்டேட் வங்கியில் லோன் வாங்கா நபர்கள் மற்றும் இறந்தவர் பெயரில் லோன் வாங்கியதாகவும் அதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் வங்கி நிர்வாக அனுப்பியதால் பொது மக்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது அலட்சியமான பதில் தெரிவிக்கின்றனர்.

    திருவாடானை தாலுகா, திருவாடானையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி கிளையில் இருந்து சின்னகீரமங்கலத்தைச் சேர்ந்த மரியகுழந்தை என்பவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப் பட்டது. அதை வாங்கி பார்த்த அவரது மகன் உரைந்து போனார். ஏன் என்றால் அவருடைய தகப்பனார் மரியகுழந்தை 2013ம் வருடம் இறந்து போனார் அவர் இறக்கும் வரையில் வங்கியில் எவ்வித கடனும் வாங்கியிருக்கவில்லை.  அப்படி இருக்கும் நிலையில் 2013ல் இறந்து போன மரியகுழந்தை 2017 வருடத்தில் ஏஜிஎல் என்ற ஸ்கீமில் லோன் வாங்கியதாகவும் அந்த லோன் படி வட்டியுடன் சேர்த்து பல லட்சம் கட்ட வேண்டும் என அனுப்பியிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். அதேபோல் மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (50) என்பவருக்கும் இதே வங்கியில் இருந்து பல லட்சம் கடன் வாங்கியுள்ளீர்கள் என்றும் அதற்கு வட்டியுடன் சேர்த்து பல லட்சம் கட்ட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி கிளை திருவாடானை வழக்கறிஞர் மூலம் அனுப்பிய நோட்டீசைப் பார்த்த சிறிது நேரத்தில் தன் இதயமே நின்று பேபானது போல் ஆகிவிட்டதாக தெரவித்தார்.


    இந்த வங்கியில் இருந்து திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நபர்களுக்கு கடன் வாங்காத நபர்களுக்கு கடன் வாங்கியதாகவும் அதற்கு வட்டியுடன் சேர்த்து கட்டேவேண்டும் என்ற வழக்கறிஞர் நோட்டீசால் மனமுடைந்தாக பலரும் தெரிவித்தார்கள் இது பற்றி திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் உதயகுமாரிடம் கேட்ட போது முதலில் கனினியை அழுத்தி பார்த்து இது குழுலோன் என்றார். பின் அப்படி என்றால் ஏன் ஏஜிஎல் என்று அனுப்பியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு நம்மிடமே லோன் வாங்கினீர்களா இல்லையா என்று திரும்ப கேட்கிறார். இல்லை என்ற சொன்னவுடன் அப்படியென்றால் அந்த நோட்டீசை தூக்கி போட்டுவிட்டு பேசாமல் இருங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார். வங்கி வழக்கறிஞரிடம் கேட்டதற்கு வங்கி கிளை கொடுக்கும் தகவலுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது எனது கடமை என்கிறார் வங்கி மேலாளர் உதயகுமார் நாங்கள் டேட்டா கொடுக்கவில்லை திருச்சி மண்டல அலுவலகத்தில் இருந்து அனுப்பியதாக பொய்யான தகவலை தருகிறார். பாதிக்கப்பட்ட நபர்கள் ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்கள். இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில் அதில் மோசடி நடந்துள்ளது . இதற்கு வங்கிகளும் உடந்தையாகவே உள்ளது. எனவே மண்டல அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்த குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad