மு.க.ஸ்டாலின் விரைவில் சிறை செல்வார் - இடைத்தேர்தல் தேவையில்லமால் புகுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ
புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் விரைவில் சிறை செல்வது மட்டுமின்றி, திமுக முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வர்கள் என்றும், இடைத்தேர்தல் தேவையில்லமால் புகுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்கள், மணல் கொள்ளையர்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் தேரேட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்தமாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ரதரோகணம் நடைபெற்றது. பின்னர் வணிக வைசிய சங்கத்தினர் மண்டகப்படிதாரர்கள் சார்பில்; தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் வந்தால் தினகரன், சீமான் மட்டுமல்ல எல்லோரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவர்கள், 18 எம்எல்ஏக்கள் பிரச்சனை எங்களுக்கு ஒரு அனுபவம், இடைத்தேர்தல் தேவையில்லாமல் வந்துள்ளது, ஜெயலிலதா அடிமட்ட தொண்டர்களுக்கு தான் போட்டியிட வாய்ப்பு அளிப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று அணிக்கு சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள், இனி வேட்பாளர் தேர்வு போது முதல்வர், துணை முதல்வர் கவனமாக செயல்படுவார்கள் என்றும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள், மணல் கொள்ளையர்கள், தொகுதி மக்களை பார்க்காமல் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது,விசுவாசமான , உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ள காரணத்தினால் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம், இடைத்தேர்தல் தேவையில்லாமல் புகுத்தப்பட்டுள்ளது, நல்ல வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று கூறிய அமைச்சர் லோக் ஆயுத்தா விரைவில் அமைக்கப்படும், திமுக முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள், சட்டமன்ற விதிமீறல் வழக்கு விரைவில் தீர்ப்புக்கு வர இருக்கிறது அப்போது மு .க ஸ்டாலின் தகுதி இழப்பு நிலை கூட உருவாகலாம், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கினை கண்டு திமுக அஞ்சுகிறது, அந்த வழக்கில் மு க ஸ்டாலின் சிறை செல்லும் நிலைமை உருவாகும் என்றார்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை