Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா – அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


    சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைந்துள்ள தேவர் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    அதிமுக

    அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் ரமேஷ், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கருப்பசாமி, இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, செண்பகமூர்த்தி, ரத்தினராஜா, ஆபிராகம் அய்யாத்துரை, அலங்காரபாண்டியன், அல்லித்துரை, செல்லையா, பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    திமுக
    திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் காளியப்பன், ராஜகுரு, சேதுரத்தினம், சோலைப்பெருமாள், மயில்கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதிமுக 
    மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஸ் தலைமையில் மதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நகர செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் கணேசன், பொன்ஸ்ரீராம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    த.மா.கா
    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் ரஜாக், பால்ராஜ், தவமணி, வழக்கறிஞர் கருப்பசாமி, ஆழ்வார்சாமி, செண்பகராஜ்,தளவாய் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.
    நாம் தமிழர்
    நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியினர் கோவில்பட்டி தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் இளைஞர் பாசறை இணை செயலாளர் பிரபு, நகர செயலாளர் மணிகண்டன், தொகுதி பொருளாளர் தியாகராஜன், தொழிற்சங்க செயலாளர் சங்கர், இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் - கோவில்பட்டி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad