Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை கோவிலில் 52 உண்டியலை கோவில் இணை ஆணையர் முன்னிலையில் எண்ணிக்கை நடைபெற்றது


    திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், ஒரு கோடியே, 74 லட்சத்து, 59 ஆயிரத்து, 151 ரூபாய் செலுத்தியிருந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் தீப விழா துவங்கி, கடந்த, 23, வரை நடந்தது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்த பக்தர்கள், தங்கம், வெள்ளி, ரூபாயை, நேர்த்திக்கடனாக செலுத்தினர். இந்நிலையில், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். இதில், 52 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ஒரு கோடியே, 74 லட்சத்து 59 ஆயிரத்து, 151 ரூபாய், 274 கிராம் தங்கம், 1,444 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.கடந்தாண்டு தீப திருவிழாவில், இரண்டு கோடியே, ஒன்பது லட்சத்து, 85 ஆயிரத்து, 443 ரூபாயும், 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளியும் இருந்தது, குறிப்பிடத்தக்கது



    செய்தியாளர்: T.V . மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad