• சற்று முன்

    வேலூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2.50லட்சத்திற்கான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது



    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க சுமார் 2.50 லட்சத்திற்கான கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 


    மாவட்டக் கழக அவைத் தலைவர் பையாஸ்பாஷா மாவட்டக் கழக துணைச் செயலாளர் சரவணன் மற்றும் கண்ணன், அண்ணாமலை ஆனந்த்பாபு கேசவன் தேவேந்திரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ், ஆதிமூலம், குமார், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்  நகர கழக நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். 

    இதில் மக்களுக்கு தேவையான அரிசி மூட்டைகள், குழந்தைகளுக்கான பிஸ்கட்டுகள், மருந்து வகைகள், லுங்கிகள் ,கைக்குட்டைகள் என அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான சில முக்கிய பொருட்களையும் அனுப்பிவைத்தனர்.


    செய்தியாளர் : திருப்பத்தூர் - நித்தியானந்தன் 





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad