• சற்று முன்

    கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் 2 பேர் கைது



    கோவில்பட்டி செண்பகா நகர் அருகே திருச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குருச்சந்திர வடிவேல் மற்றும் அரிக்கண்ணன் ஆகியோர்  தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இலுப்பையூரணி செண்பகா நகர் பகுதியில் வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, திருச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்தினர். மேலும் லாரி டிரைவர் சங்கரன்கோவில் அடைக்கலபுரத்தை சேர்ந்த காளிராஜ், கிளீனர் வீரகாளி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
     செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad