Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் தாக்கி ரூ. 55,000 வழிப்பறி – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு



    கோவில்பட்டியில் பைக்கில் சென்று கொண்டு இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேல்முருகன், விற்பனையாளர் குணாநிதி ஆகிய இருவரையும் தாக்கி விட்டு, ரூ.55 ஆயிரத்தினை முகமூடி அணிந்த 4 நபர்கள் அரிவாளால் தாக்கி, பறித்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். அதைகடையில் எட்டயபுரத்தை சேர்ந்த குணாநிதி(43) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர். வேல்முருகன் மதுபான விற்பனை தொகையான ரூ.55,010ஐ ஒரு பையில் வைத்திருந்தார்.இருவரும் பைக்கில் சென்றபோது,  திடீரென வழிமறித்த முகமூடி அணிந்த 4 பேர் அவர்களிடம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது பணத்தை தர வேல்முருகன் மறுக்கவே, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற குணாநிதியையும் தாக்கி விட்டு, ரூ.55, 010ஐ பறித்து கொண்டு தாங்கள் வந்த பைக்களில் தப்பியுள்ளனர்.

    காயமடைந்த இருவரும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து  சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருவரையும்; மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 4 பேரை தேடி வருகின்றனர். 

    டாஸ்மாக் மேலாளர் வேல்முருகன் தாக்கப்பட்டு பணம் பறிமுதல் கொடுத்தது இது 2வது தடைவ என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்று தாக்குதலுக்குள்ளாகி பணத்தினை பறிகொடுத்துள்ள நிலையில் மீண்டும் நேற்று அதைபோன்று தாக்கப்பட்டு பணத்தினை பறிமுதல் கொடுத்தள்ளார். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad