Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் சொத்துவரி உயர்வினை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா போராட்டம்



    கோவில்பட்டி நகராட்சி பகுதியில், மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியை விட அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், உயர்த்தப்பட்ட வரி உயர்வினை திரும்ப பெற வேண்டும், ஏ.பி.சி.டி என்ற வரி விதிப்பு மண்டலங்களில் வரி விதிப்பினை மாற்றம் செய்ய கூடாது, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தி;ல் ஈடுபட்டனர். 


    நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கண்டன உரையாற்றினர். இதில் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயலெட்சுமி, ராமசுப்பு, நகரகுழு உறுப்பினர்கள் சக்திவேல்முருகன், அந்தோணிசெல்வம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கம் மாநில செயலாளர் முத்துகாந்தரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் மாடசாமி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்துதங்களது கோரிக்கை மனுவினை நகராட்சி மேலாளர் முத்துச்செல்வத்திடம் அளித்தனர்.


    சூ=செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad