Header Ads

  • சற்று முன்

    டெங்குக்கு தனி வார்டு அமைத்தது திருவாடானை அரசு மருத்துவமனை


    திருவாடானை அரசு மருத்துவ மனையில் மர்மக் காய்ச்சல் டெங்குகாய்ச்சல், பன்றிக் காய்யச்சல் போன்ற காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மர்ம காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவி வருவதை அடுத்து திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்க மாவட்ட மருத்துவர் அறிவுறுத்தலின் படி 20 படுக்கைகள் கொண்ட ஆண்கள் பெண்களுக்கென்று வார்டுகள் அமைக்கப்பட்டு, இந்த வார்டில் சுத்தமான குடிநீர், ஒவ்வோர் படுக்கைக்கும் கொசு வலை போன் வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


    மேலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை கண்டறியப்படும் பட்சத்தில் மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பதாக திருவாடானை மருத்துவர்கள் கூறினார்கள் .

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad