• சற்று முன்

    ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஐம்பொன் சாமி சிலை : கண்டெடுப்பு


    ஓசூர் அருகே பாத்தக்கோட்டா பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்று தண்ணீரில் ஐம்பொனிளான நரசிம்மர் சாமி சிலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சூளகிரி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற  கிராம வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆற்றிலிருந்த ஐம்பொன் சிலையை கண்டெடுத்து நரசிம்ம சாமியின் ஐம்பொன் சிலை ஒன்றரை அடி உயரமும் சுமார் 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. பழமையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட நரசிம்மசாமி வடிவத்தில் இருந்தது. கண்டெடுக்கப்பட்ட  சிலையை சூளகிரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

    சூளகிரி போலீஸார் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலையை காவல் நிலையத்திற்க்கு கொண்டு வரப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது இந்த ஐம்பொன் சிலை சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் மாவட்ட அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெறிவித்தார். ஐம்பொன் சாமி சிலை ஆற்றில்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    செய்தியாளர் : சி. முருகன் - கிருஷணகிரி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad