Header Ads

  • சற்று முன்

    4 டன் எடையுள்ள கஞ்சா புகையிலை போதை பொருட்கள் பறிமுதல்


    ஓசூரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ஓட்டுனரிடம் விசாரணை
    பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கண்டெனையிர் லாரியில்  கடத்தப்படுவதாக ஓசூர் வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதையடுத்து ஓசூர் வட்டாட்சியர் முத்துபண்டி தலைமையில் வருவாய்த்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்தலப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கண்டெனர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்த போது ஓட்டுனர் முன்னுக்கு பின் பேசியுள்ளார், தொடர்ந்து விசாரித்ததில், ஓட்டுனர் சென்னை வியாசர்பாடி சேர்ந்த சசிகுமார் என்றும் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், உள்ளிட்ட4 டன் புகையிலை பொருட்களை  பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
    இதையடுத்து வருவாய்த்துறையினர் பல.லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து  ஹட்கோ காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். 

    இதன்  நம் மக்களின் சப்தம் இதழலில் பார்க்கலாம். 


    செய்தியாளர் : கிருஷணகிரி - சி.முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad