• சற்று முன்

    "கோலாகல நவராத்திரி ஆரம்பம்


    சிவனுக்கு ஒரு ராத்திரி, அது சிவராத்திரி. சக்திக்கு ஒன்பது ராத்திரி, அது நவராத்திரி. சக்தி வழிபாடு (சாக்தம்) பற்றிக் கூறும் நூல்களில் நான்கு நவராத்திரிகள் பற்றி விவரமாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று மட்டும்தான் தற்போது பிரசித்தமாக இருக்கிறது. நான்கு நவராத்திரிகளுமே கொண்டாடப்பட வேண்டியது என்று சாக்த நூல்கள் கூறுகின்றது.நவராத்திரி பூஜை என்பது அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாள் நடக்கும். தசமியில் துர்க்கா பூஜையுடன் நிறைவுறும்.

    இந்த நவராத்திரியில் சக்தி முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும், கடைசி மூன்று தினங்கள் ஸ்ரீசரஸ்வதியாகவும் இருக்கிறாள். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை வழிபடும் முறையைப் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நமக்கு வழிகாட்டுகிறார்.

    முதலாம் நாள்:-

    அம்பாள்: சாமுண்டி உருவ அமைப்பு: தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள் குணம்: குரூரம் (நீதியைக் காக்க) சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி

    நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 - 12; மாலை: 6 - 7.30
    பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை

    சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7

    பாட வேண்டிய ராகம்: காம்போதி

    வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

    எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)

    திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு - திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்

    ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad