• சற்று முன்

    பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடுயின்றி நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்


    அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில்  கொரட்டூர் ஏரி  ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அம்பத்தூர் வட்டாசியர் அலுவலகத்தை சுமார் 1000 க்கும் மேற்ப்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் வட்டாசியருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதன் முடிவில் மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக தெரிவித்தார். 

    அதன்படி மாலை 5 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் வருவாய் கோட்டாசியர் பன்னீர்செல்வம்,வட்டாசியர் சுராஜ் ஆகியோர் போராட்ட காரர்களின் குழுவினருடன்   பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்க மறுத்து வரும் வெள்ளிகிழமை முதல்  நீர்பிடிப்புகளில் உள்ள 582 குடியுருப்புகளும் அகற்றப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.


    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த


    சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்கள் நீதி மன்ற உத்தரவின் பெயரில் 8 வாரங்களுக்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 2 வாரங்களுக்குள் அதனுடைய தகவல்களை கொடுக்கவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதன்படி கொரட்டூர் ஏரி ஆக்கிரப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வெள்ளிகிழமை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைப்பெறும் என்றும் அவர்களுக்கு மாற்று இடம் குறித்த விபரங்களை குடிசைமாற்று வாரியத்துடன் ஆலோசித்து நாளை தெரிவிக்கப்படும் என்று கூறினார். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கல்லூரி,வனிக வளாகம்,ஏழை  பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த இடங்களை விற்ற மாபியா கும்பல் மீது அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மழைவெள்ளத்தின் பொழுது ஐந்து லட்சம் அல்லது பத்து லட்சம்  மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரிய பாதிப்புகளை தவிர்க்க சிறிய பாதிப்புகளை சகித்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad