Header Ads

  • சற்று முன்

    விவசாயின் குறைக்கு அதிகாரிகள் சொல்லும் பதில்மரம் விழுந்தா தான் மின் கம்பம் மாற்றமுடியும் மரம் எப்போ விழறது - அதிகாரி எப்போ சரி செய்றது




    திருவாடானை அருகே விவசாயிகளின் வயக்காட்டில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பம் பழுதடைந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்
     திருவாடானை தாலுகா திருவாடானை அருகே ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோட்டைச்சாமி மற்றும் அழகர் இவர்களது விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் வழியாக திருவாடானையில் இருந்து ஆண்டிவயல், ஆதியூர் திருவெற்றியூர் மார்க்கமாக தொண்டிக்கு  உயர் மின்னழுத்த செல்கிறது அப்படி செல்லும் மின்கம்பியை தாங்கும் மின்கம்பங்கள் உடைந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பிகள் பலத்தால் தாங்கி நிற்கும் அவல நிலை உள்ளது இந்த கம்பம் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் இந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஆபத்தாக உள்ளது எனக் கருதி விவசாயி கோட்டைச்சாமி விவசாயம் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றார். அதே போல் அழகர் என்பவர்கள் நிலத்தின் வழியாக செல்லும் மின் கம்பம் மிகவும் சாந்த நிலையில் எந்த நேரத்திலும் விழும் என்பது தெரியாத அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது மேலும் ஒரு மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிறது 

    இதுகுறித்து அந்த விவசாயிகளிடம் கேட்டபோது அவர் கடந்த நான்கு வருடத்திற்கு மேலாக இந்த அவல நிலை நீடிப்பதாகவும் விவசாய காலத்தில் மரக்கட்டைகளைக் கொண்டு மின்கம்பியை தூக்கிப் பிடித்துக் கொண்டு உழுது விவசாயம் செய்வதாகும், வயலில் தண்ணீர் கிடந்தால் எங்களால் களை எடுக்க முடியவில்லை மின்சாரம் தாக்கும் என்ற பயத்தில் வயலில் இறங்குவதே இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் கூறியதாகவும் அதற்கு அதிகாரிகள் ஏதாவது விபத்து நடந்தால் மட்டுமே இந்த இந்த இடத்தில் மாற்றுவதாகவும் இல்லையேல் மாற்ற வாய்ப்பில்லை என அலட்சியமாக பதில் தெரிவித்ததாக குற்றம் சாட்டுகிறார் எனவே சம்பந்தப்பட்ட மின் வாரியத்தினர் இந்த இரண்டு மின் கம்பங்கள் உடனடியாக மாற்றி விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப் படாத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்

    திருவாடானை 
    லெ.ஆனந்த குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad