டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள வயர்லஸ் டவர் மீது ஏறி போராட்டம் செய்த வாலிபர்
கோவில்பட்டியில் தொலைந்து பள்ளி கல்வி சான்றிதழை மீட்டு தரக்கோரி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான வயர்லஸ் டவரில் வடக்கு திட்டங்குளத்தினைச் சேர்ந்த ஜோதிரமேஷ் என்பவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஜோதிரமேஷ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கி விசாரண நடத்தி வருகின்றனர். இவர் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது, இது 3வது முறை மற்றும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தினை சேர்ந்த சரவணனன் என்பவரது மகன் ஜோதிரமேஷ். கூலி தொழில் செய்து வரும் ஜோதிரமேஷ் என்பவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் ஏறி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை என்றும், அதனை மீட்டும் தரவேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பேசி நைசாக கீழே இறங்க வைத்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜோதிரமேஷ் கீழே இறங்கினார். அவரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிரமேஸ் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிரமேஷ் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது இது 3வது முறை என்பது குறிப்பிடதக்கது. குடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கூறி சுபா நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குhலையில் நடைபெற்ற இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செய்திதியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை