Header Ads

  • சற்று முன்

    மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள், அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக வழங்கி மகிழும் விழா என்ற பெயரில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பிராட் வழங்கினர். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு புதிய ஆடைகளையும் வழங்கினர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரில் செயல்பட்டு வரும் எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து மாணவ-மாணவிகளுக்கு, அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும், அனைவரிடமும் மனிதபிமானத்துடன் பழக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக வழங்கி மகிழும் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். 


    இந்தாண்டுக்கான வழங்கி மகிழும் விழா இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் சேமிப்பு செய்த பணத்தினை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கி, அதன் மூலமாக பிராட் வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கியது மட்டுமின்றி, அவர்கள் விரைவில் நலம் பெற பிராத்தனையும் செய்தனர்.. மேலும் இன்று பிறந்த குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வழங்கி, அவர்களை இந்த பூமி வருவதை வரவேற்றனர். மேலும் இந்த வாரம் முழுவதும் பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வு மூலமாக தங்களுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கு அனைவருக்கும் உதவு வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாகும் என்று மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad