Header Ads

  • சற்று முன்

    ஓசூர் காட்டு யானைகள் சானமாவு வனபகுதிகுள் தஞ்சம் - சுற்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !



    ஓசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை வனப்பகுதியிலிருந்து வந்த 12 காட்டுயானகள் சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. இதனால் சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள சானமாவு, பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆழியாளம், உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



    ஓசூர் அருகேயுள்ள சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானைகள் கூட்டம் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டப்பட்டது. இதனால் ஓசூர் சுற்றுப்புற பகுதி கிராம விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதியடைந்திருந்தனர். இந்த நிலையில் தேன்கனிகோட்டை வனப்பகுதியில் சுற்றிவந்த 12 காட்டுயானைகள் இன்று இடம்பெயர்ந்து ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.



    காட்டுயானைகள் சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதை உறுதி படுத்திய வனத்துறையினர் அதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே காட்டுயானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அதனை சுற்றியுள்ள சானமாவு, பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆழியாளம், காமன்தொட்டி, பன்னப்பள்ளி, குக்களப்பள்ளி, பாத்தகோட்டா உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    கிராமத்தின் அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக பணிகளை செய்ய வேண்டும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் தனியாக நடந்து செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். காட்டுயானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. சானமாவு வனப்பகுதி சுற்றுப்புற கிராமமக்களுக்கு மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

    செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad