க்ரிஷ் இயக்கி வரும் என்.டி.ஆரின். வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஸ்ரீதேவியாக நடிப்பது உறுதியாகியுள்ளது
கமர்ஷியல் படங்களில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது கார்த்தி ஜோடியாக தேவ் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடிக்கிறார். இது தவிர ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.
டூயட்
ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நடிப்புத் திறமை இருந்தும் அவர் ஏன் ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் அவரின் கெரியர் உச்சத்தை தொடுமே என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரகுல்.
ரகுல்
நான் நல்ல, நல்ல கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் எப்பொழுதுமே கிடைக்காது. அதற்காக சும்மாவா இருக்க முடியும். அதனால் கமர்ஷியல் படங்களில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் ஹீரோயினாக நடிக்கிறேன். இதில் தவறு இல்லையே என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கதை

ஸ்ரீதேவி
க்ரிஷ் இயக்கி வரும் என்.டி.ஆரின். வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஸ்ரீதேவியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடிக்கிறார். அவரின் மனைவியாக வித்யா பாலனும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை