Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் த மா கா சார்பில் வரும் 12ஆம் தேதி பஸ்கள் சிறைபிடிக்கும் போராட்டம் அறிவிப்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அண்ணா பஸ் நிலையத்தில் கால அட்டவணைப்படி இயங்காமல் பஸ் நிலையத்திற்குள் வந்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து செயற்கையான போக்குவரத்து நெருக்கடி  ஏற்படுத்தும் பஸ்கள் மற்றும் மினி பஸ்களை வரும் 12ஆம் தேதி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக த மா கா வினர் அறிவிப்பைச் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கோவில்பட்டி நகராட்சி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நல்ல முறையில் நெருக்கடி இல்லாமல் பஸ்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட சிறிது காலமாக பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி இயங்காமலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிரிப்புகளை நடைமுறைப்படுத்தாமலும் , அதிகமாக இயக்கவேண்டும் என்பதனை தொடர்ந்து பஸ் நிலையத்திற்குள் தண்ணீர் குழாய் அடியில் குடங்களை வைத்திருப்பது போல தேவையில்லாமல் பஸ் நிலையத்திற்குள் பஸ்களை நிறுத்தி இடம் பிடித்துக் கொண்டும், கூடுதலாக தனியார் மற்றும் அரசு பஸ்களும் உள்ளே பஸ் நிலைய வளாகத்துக்குள் குறுக்கும், நெடுக்குமாக பஸ்களை நிறுத்தி வைப்பது தொடர்கதையாக உள்ளதால் நகர் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு செயற்கையான போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் காலையிலும், மாலையிலும் மிக நெருக்கடியான நிலை போல் காட்சி அளிக்கிறது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை ஏன்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. மேலும் போக்குவரத்தை சரி செய்யவும் அனுமதி இன்றி கூடுதல் டிரிப் எடுக்கும் வாகனங்களை பஸ் நிலைய வளாகத்துக்குள் நிற்க விடாமல் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி வருகின்ற 12ஆம் தேதி பஸ் நிலையத்திற்குள் கால அட்டவணைப்படி செயல்படாமல் நிற்கக்கூடிய பஸ்கள் மற்றும் மினி பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad