ஓசூர் அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவ இணை இயக்குநர் செல்வராஜ் ஆய்வு
தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் அதிகரித்து வருவதால், மாநில முழுவதும் சுகாதார துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு மாவட்டதொரம் மருத்த்துவமனையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தொடர்சியாக இன்று கிருஷணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் டெங்கு, பன்றி காய்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்த்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சாந்தி அவர்களுக்கு ஏற்பாட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் டெங்கு, பன்றிகாய்ச்சல் குறித்து எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் ஓசூர் தொழில் நகரமாகும் மேலும் கர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ளது. ஓசூர் நகராட்சி பகுதியில் அதிகளவில் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் உள்ளது ககுறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் 15 பேர் டெங்கு, 10 பேர் பன்றி காய்சல் பாதிக்கப்பட்டுளனர், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு அதற்கு தேவையான அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர் : ஓசூர் - சி.முருகன்
கருத்துகள் இல்லை