• சற்று முன்

    குடி மகன்களுக்கு கூடாரமாக திகழும் நம்புதாளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி



    திருவாடானை தாலுகா தொண்டி அருகே அரசு பள்ளி சுற்று சுவர் இடிக்கப்பட்டுவிட்டது. இதை உடனடியாக சரி செய்ய கோரிக்கை வைத்தார்கள்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள் . இந்த பள்ளியின் அருகில் மிக பழமைவாய்ந்த பள்ளி பழுதடைந்த நிலையில் அதை அகற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது ஆபத்தான கட்டிடம் அகற்றப்பட்டது. அப்படி அகற்றும் பொழுது சுற்றுச்சுவரை ஒரு பகுதியில் இடித்து விட்டார்கள். ஆனால் அதை இதுவரை சரி செய்யவில்லை இதனால் இரவு நேரங்களில் மது பிரியர்கள் உள்ளே வந்து மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து செல்கின்றனர் இதனால் மாணவ மாணவியருக்கு ஆபத்தாக உள்ளது 
    இதுகுறித்து பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கூறுகையில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட வேண்டும் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தார்கள்.

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad