Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நடத்திய தீயணைப்புத்துறையினர் - பழுதான தீயணைப்பான்..


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “விழிப்புடன் இருப்போம், பேரிடரை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பரமசிவன், தலைமை ஆசிரியர் முனியசாமி, மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் முருகையா  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தீயணைப்பு நிலைய அலுவலர்  சங்கரன் தலைமையிலான வீரர்கள், 

    தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் ஆபத்துகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல் முறை விளக்கமளித்தனர்.அப்போது வீட்டில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டால் தீ யை அணைப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தனர். 


    அப்போது செயல்முறை விளக்கத்திற்காக தீ யை பற்ற வைத்து, தீ அணைப்பணை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் விளக்கம் அளிக்கும் போது, தீ அணைப்பான் உபகரணம் வேலை செய்யவில்லை, பலமுறை முயற்சி செய்தும் தீ அணைப்பான் வேலை செய்யவில்லை, பின்னர் அது பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது. 


    இதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள தீ அணைப்பானை கொண்டு வந்து செயல்முறை விளக்கம் அளிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த தீ அணைப்பானும் பழுது என்பது தெரியவந்தது. பேரிடர் காலத்தில் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீயணைப்புத்துறையே பழுதான உபகரணங்களை வைத்து இருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad