Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடியில் 6 புதிய அரசு பேருந்துகள்: அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தார்.


    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடியின் சார்பில், தூத்துக்குடி பழையபேருந்து நிலையத்தில், 6 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர். அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை. தலைமைச் செயலகத்தில் இருந்து போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ரூ.126 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டிலான 471 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்துத்துறையில் புதிய மாற்றம் ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே வழித்தடங்களில் ஒடிக் கொண்டிருந்த பழைய பேருந்துகள், புதிய பேருந்துகாளாக மாற்றப்பட்டு வருகிறது.



    அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் - கோவில்பட்டி, திருவைகுண்டம் - இராமேஸ்வரம், திருச்செந்தூர் - திண்டுக்கல் (வழி திருநெல்வேலி), தூத்துக்குடி - இராஜபாளையம் (வழி கோவில்பட்டி), விளாத்திக்குளம் - திருநெல்வேலி, திருச்செந்தூர் - வேளாங்கன்னி ஆகிய 6 புதிய பேருந்துகள், பொது மக்களின் பயன்பாட்டிற்;கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்த பேருந்துகளில் பயனாளிகள் வசதிக்காக ஸ்பீக்கர் மூலம் பேருந்துகள் நிற்கும் இடம் குறித்து முன்னதாகவே, பயனாளிகளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் நவீன முறையில் இருக்கை உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி போக்குவரத்துத்துறை மறுமலர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் 
    முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில், முதன் முறையாக தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் வகையில், தலா ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான, குப்பைகளை உறிஞ்சும் 2 வாகனங்களை (Robotic carbage Collecting Machine)) அமைச்சர் தொடங்கி வைத்து, நவீன முறையில் செயல்படும் அதன் செயல்பாட்டினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சயில் மாநகராட்சி ஆணையர் அல்பி ஜாண் வர்க்கீஸ் , முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் துரைராஜ், மாவட்ட கோட்ட மேலாளர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் சின்னத்துரை, பி.டி.ஆர்.ராஜகோபால், டேக்ராஜா, தாமோதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad