ஓசூர் மாநகராட்சி அலட்சியம் - பகுதி மக்கள் பீதி ..........
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சாலையில் ஆறாக ஓடும் சாக்கடை நீர் தொற்று நோய் பரவும் அபாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிருந்தாவன நகரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பைப் லைன் முறையாக சீர் செய்யாததால் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மூக்கை பிடித்தவாறு செல்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. ,மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே , நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கால்வாய் சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : கிருஷ்ணகிரி - சி. முருகன்
கருத்துகள் இல்லை