Header Ads

 • சற்று முன்

  என்னைக் கொல்லாதே (ஆசிரியர் நீலம் மூன் ) இந்த கதையின் முன் பார்க்க (13.10.18)


  ஓடியவனின் சட்டையை  கை வீசிப் பிடித்தான். மணலில் மல்லாக்காக விழுந்தான்.  வயசில பெரியவனா  இருக்கே சொல்லு  நீங்க யாரு. ஆன்டிக்கும் உங்களுக்கும் தொடர்பு என்ன உளுக்கினான். தம்பி என்னை கொல்லாதீங்க உசுருக்கு உத்திரவாதம் கிடையாது. சூரியன் தலை கவிழ்ந்து இருள் சூழ மங்கலாக  பிம்பங்கள் கடற்கரையில் நடக்கவும். ஆமாம், நீ  எப்படி வந்தே, சொல்லு பெண் பார்க்கும் இடத்தில் காந்தனுக்கு ஆபத்து என்று  யாரு சொல்ல சொன்னது ஒழுங்கு  மரியாதையா சொல்லு.    ஐயோ சாமி எனக்கு தெரியாது  ஆளை விடுங்க ஆபத்து உங்களுக்கு காத்திட்டு இருக்கு  புரிஞ்சுகோங்க.   விடுங்க  எழும்ப முயற்சிக்க சம யோசிதமாக  கையில் மணலை அள்ளி தெறிக்க முயலும் போது  அவர்களையே  கவனித்த நிலா தன்   துப்பட்டாவை எடுத்து அவன் கரத்தை கட்டினாள். தன் திட்டம் தோற்கவும் சிறு பிள்ளையாக நீலேஷ் கரத்தை அழுத்தமாக கடித்தான். வலி பொறுக்காமல் ஓ..ஓ வென கத்திக் கொண்டு சட்டையை விட்டு விட்டான். அதே சமயம் குண்டு கிழவனை நாலு பேர் இழுத்து சென்றனர். வலியால் துடித்தான் நீலேஷ். இரத்தம் கொட்டியது. அவனை  தன் தோளில் தாங்கி சாலைக்கு வந்தாள்  நிலா. பின்பு, ஓலா கார் புக் செய்து தங்களின் ப்பமளி டாக்டரிடம்  அழைத்து சென்றாள். புஸயென பூரி போல் உப்பி இருந்த கையை பார்த்து திகைத்தார்.  அம்மா நிலா நீலம் பாய்ந்து கண்ணி  போய்ச்சு  விஷக்கடியா   ஆழ்ந்து சோதித்தார். எட்டு பல்லு ஆழமா  மேலும் கீழும்  பதிந்து இருக்கு எந்த விஷ ஜந்து  கடிச்சுது.     மனுஷ ஜந்து கடிச்சுது  டாக்டர். ரெஸ்ட் தேவையானால் கிளினிக்கில் அட்மிட் பண்ணுங்க 
  ஒகே அட்மிட் பண்றேன் நிலா.  ஆனால் அவருக்கு துணைய யாரு இருப்பாங்க      நான் கூட இருக்கேன்.  கை வீங்கி வலியால் துடித்தான் நீலேஷ் பார்க்க   பரிதாபமாக ஒடிங்கி கிடந்தான்.  மயங்கிய நிலையில். கிடந்தவனுக்கு   ட்ரிப் ஏறியது. அருகே அமர்ந்திருந்த நிலா அவனின் சுறுசுறுப்பான முகம் களை இழந்து வாடி பொலிவிழந்ததை காண சகிக்காமல் கண்ணீர் வடித்தாள். அந்த சமயம் நீலேஷ் கைப்பேசி சிணுங்கியது. காந்தன் எண் .அய்யோடா வேறு வினையே வேண்டாம்  வார்த்தையாலே  சமாதி ஆக்கிடுவான். அட்டன் பண்ணாமல் விடுவது நல்லது என எண்ணினாள். தொடர்ந்து பல முறை அடித்து ஓய்ந்தது.  ஒருவழியாக மயக்கம் தெளிந்தவன் .தான் மருத்துவ மனையில் உள்ளதை அறிந்தான்.  பக்கத்தில் நிலா அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தான்.  நீலேஷ். ஏய் மணி பதினென்று ஆகுது வீட்டுக்கு போகாமல் தப்பு கிளம்பு.  என விரட்டினான்  கவலைபடாதே தோழா கவலை படாதே அப்பனிடம் அனுமதி வாங்கியாச்சு இந்த ஆஸ்பிட்டல்  எங்க ப்பமளி டாக்டர் உள்ள இடம் முக்கியமா காந்தன் போன் பண்ணிட்டே இருக்காரு நீங்களே பேசுங்க  என்றாள்.                                காந்தனுடன்  பேசினான். டேய் எங்கே போனே பதட்டத்துடன் கத்தினான். நான் சொல்லுறதை நிதானமாக கேளு . இன்னிக்கு  சாயிந்தரம் மெரினா பீச்சுக்கு போனேன். என்னையும் அழைச்சிட்டு போயிருக்கலாம் இல்ல. என குறுக்கே  வெட்டினான் காந்தன். பேசவிடு காந்தா, குண்டு கிழவன் எதிர்பட்டான்  அவனை துரத்தி பிடிச்சு ஆன் டிக்கும் உனக்கும் சம்மந்தம் என்ன கேட்டா கையைப் பிடித்து கடிச்சுட்டு தப்பிச்சுட்டான். மிஸ்டர் இந்த டாபிலேட் போடுங்க டாக்டர் வர்ற நேரம் என குரல் கொடுத்தாள் நர்ஸ்.      டேய் மாப்பிள்ளே எங்கே இருக்கிறே..   ஆஸ்பிட்டல்    சரி துணைக்கு நான்  வர்றேன்  வேண்டாம் காந்தா நானே சமாளிப்பேன்  ஏன் அந்த நிலா பொண்ணு கூட இருக்காலா. டாக்டர் வர்ற சமயம் அப்புறம் பேசுறேன்,        எந்த ஆஸ்பிட்டல்  போனை வைத்தான்..காந்தனுக்கு  கழுகு கண்ணு நிலா  நீ பக்கத்திலே இருப்பதை மோப்பம் புடிச்சிட்டான்.அப்போ  வந்திடுவாரா நீலேஷ்  ச்சீச்சீ  பயப்படாதேம்மா அவனுக்கு அட்ரஸ் தெரியாது. நீ சாப்பிட்டியா   தலையை ஆட்டினாள்  இல்ல என ஆனாலும் கேண்டீனிலிருந்து சப்பாத்தி பட்டர்  நாண் குருமா வாங்கி வந்துட்டேன்.. என புன்னகையுடன்  எழுந்தாள்   பின்பு டாக்டர்  விசிட் வந்து சென்றதும், அவனுக்கு சப்பாத்தியை ஊட்ட முயலவும்  வேண்டாம் என மறுத்து அவனே  அவளிடமிருந்து வாங்கி  தானே சாப்பிட்.டான். நீலேஷ், ஆன்டி வீட்டை முழுவதையும் சோதிக்கணும் ஏதாவது க்ளு கிடைக்கலாமில்ல. ஆனா காந்தன்   சார்    என்னை கண்டாலே கரிச்சு கொட்றாரு. அப்படிஎன்ன பெருசா தப்பு கண்டாரு என்னிடம். உங்ககிட்ட அதிகபடியா சலுகை எடுத்துக்கிறேன் அவருக்கு எந்த பாதிப்புமில்லையே என தன் ஆதங்கத்தை கொட்டினாள் .அதிலும் தன்ஆசையை நாசுக்காக வெளிப்படையாக பச்சைக் கொடி காட்டினாள்.நிலா  அவளின் மனநிலை அறிந்தாலும். இதழோரம் புன்புறுவல் பூத்தவன். யாருகண்டா சொக்கு பொடி தூவி தள்ளிட்டு போயிடுவே என்ற பயமிருக்கலாமில்லஎன்று போலியாக  நடித்தான்.  அவனது பேச்சுஸூர்ரென  உச்சந்தலையில் ஏற  .என்னது நானா நானா கோபத்தில் கையிலிருந்த தட்டை வீசப் போனாள். சட்டென பால் பொழியும் வெண்ணிலாவுக்கு  கோபம் வரலாமா அதுவும்என்னிடம் வரலாமா. எழுந்து கையைப்பற்றி திருப்பினான். அவள் சூடிய ஜாதி மல்லிப்பூ தன் வசம் இழுக்க சுழல் மறந்து நிலாவென. அன்போடு அழைத்து, அவளின் கையை இறுகப்பற்றி தன் நெஞ்சில் வைத்து உள்மூச்சு இழுத்து நிலா உன் சுவாசம் ஆ..ஹா.. இலேசாக சன்னல் பக்கம் கண் திரும்ப அங்கே  புன்னை மரத்தடியில் சிரித்து நின்று அவனை அழைத்தாள்                  

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad