Header Ads

  • சற்று முன்

    நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி வளாகத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மூலம் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது


    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி வளாகத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மூலம் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைத்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 3000 சதுர அடி பரப்பளவில் 600 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.   , கல்லூரி முதல்வர் காமராஜ் , வனம் தன்னார்வ அமைப்பு நிறுவனர் கலைமணி, சவுதி அரபியா ஜெத்த தமிழ் சங்க தமிழக பிரதிநிதி இராம விஜயன், சமூக ஆர்வலர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


    அடர்வனம்:
    இது ஜப்பான் தாவரவியலாளர் "அகிரா மியாவாக்கி"என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் பூமியில் மூன்று அடிக்கு ஆழத்தில் தோண்டி குழியில் கழிவுகளை நிரப்பி மக்க செய்து அதில் மண் நிரப்பி மேற்பரப்பில் இரண்டு அடிக்கு ஒரு செடியாக நெருக்கமாக நடவு செய்வது.

    இவ்வாறாக மரம்  நடுவதில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு விரைவாக வளர்ந்து சிறிய காடாக மாறும். இதில் பறவைகள் விரும்பி உண்கிற பழ மரக்கன்றுகளையும் மழைக்கவர்ச்சி செய்யக்கூடிய நாட்டு மரக்கன்றுகளையும் தேர்வு செய்து நட இருக்கிறோம்.இது பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரிதும் உதவும்.


    குறிப்பு:
    இது டெல்டா மாவட்டங்களில் அரசு கல்லூரிகளில் அமைய இருக்கின்ற முதல் மியாவாக்கி அடர்வனம்.

    செய்தியாளர் : நன்னிலம் - வி.ஆர். மணிகண்டன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad