• சற்று முன்

    முறையான சாலை அமைக்கப்படாததால் சுவாசகோளறு சம்மந்தப்பட்ட நோய்க்கு ஆளாகும் பொது மக்கள் மற்றும் வணிகர்கள்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ்தி வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத மோசமான நிலையில் இருந்துவந்தன.

    இந்நிலையில் பஸ்தி வழியாக செல்லக்கூடிய சாலையை சீரமைத்து புதியதாக சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டனர் அப்போது சாலை போடுவதற்காக கொட்டப்பட்ட பெரிய ஜல்லி கற்களும் ரோபோ ஸ்டாண்ட் என கூடிய மணலும் ஒன்றாக கலந்து சாலையை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரிய ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் இந்தப் பணியினை சில நாட்களாக கிடப்பில் போடப்பட்டு பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும்   வாகனங்களின் டயரில் மாட்டி நாலாபுரமும் ஜல்லிகற்கள் சிதருவதால்  அந்த வழியாக செல்லும் மக்கள் மீது  மேலே பட்டு காயங்கள் ஏற்படும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



    மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது  தூசி புகைமூட்டம் போல் பரவுகிறது. அதனால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், இன்னலுக்கு வாகன ஓட்டிகள் ஆளாகின்றனர்.  மேலும் சாலையோரம் உள்ள வீடுகளில் தின்பண்டங்களில் கலைகளிலும் தூசி பரவி வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சாலை பணியினை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : கிருஷணகிரி - சி. முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad