திருவாடானை அருகே வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை
திருவாடானை தாலுகா திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை சய்து கொண்டார். இது குறித்து திருவாடானை காவல் நிலையத்தார் விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் இவர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ஸ்ரீகாந்த் (20) அரசு கல்லூரியில் இளங்களை இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் வீட்டு விவசாய வேலையை சரி செய்யவில்லை என பெற்றோர்கள் திட்டியதாக தெரியவருகிறது. இதில் மனமுடைந்த வாலிபர் மணிகன்டி கிராமத்தில் வயல்காட்டில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு பலியானார். இது குறித்து இவரது தகப்பனார் பால கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிவுசெய்து பிணக்கூறு ஆய்விற்கு பிறகு ஸ்ரீகாந்த் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எமது செய்தியாளர் : திருவாடானை - ஆனந்த் குமார்
கருத்துகள் இல்லை